கர்ப்பமாக்கிய காதலனிடத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய  காதலி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரோஜா,  இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.  இவருடன் பணியாற்றி வந்த காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் ரோஜாவுக்கு காதல் ஏற்பட்டது. 

இதனையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து  காதல் வளர்த்தனர்.  அதே நேரத்தில்   ரோஜாவை தனது இரு சக்கர வாகனத்தில்  பல இடங்களுக்கு அழைத்துச் சென்று   ரோஜாவுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் ராஜேஷ்.  இதில் ரோஜா கர்ப்பமானார்.  இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரோஜா  ராஜேஷை வற்புறுத்தியதாக தெரிகிறது,  இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு அடந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக கிடந்தார் ரோஜா.   இதைக்கண்ட அப்பகுதிமக்கள்  காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

 

அதில் ரோஜாவின் உடலில்  சிகரெட்டால் சூடு  வைக்கப்பட்டு அவர் துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இந்நிலையில் கொலைக்கு  காரணமான காதலன்  ராஜேஷ் கைது செய்ய வேண்டுமென ரோஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை அடிப்படையில் ரோஜாவின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார்.  ரோஜாவை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன் அவரைக் கொலை செய்த காதலன் ராஜேஷை போலீசார் கைது செய்து பின் சிறையில் அடைத்தனர்.