காஞ்சிபுரத்தில் சோகம்.. தேர்தல் நடத்தும் அதிகாரி மாரடைப்பால் உயிரிழப்பு.. தேர்தல் ஒத்திவைப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக வார்டு உறுப்பினர்களிடம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஹரி என்பவர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
மறைமுக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாங்கி ஊராட்சியில் நடைபெற்று வந்த மறைமுகத் தேர்தல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்காக வார்டு உறுப்பினர்களிடம் மறைமுகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஹரி என்பவர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்டு ஆம்பூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தாங்கி ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.