தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களை விட பள்ளி மாணவர்கள் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளுவது, ஆசிரியர்களை கத்தியை காட்டி மிரட்டுவது, பேருந்து மற்றும் ரயில் படிக்கட்டுகளில் புட்போர்டு செய்வது என அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் மது அருந்தும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பள்ளி சீருடையில் பீர் குடிக்கும் மாணவிகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களை விட பள்ளி மாணவர்கள் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொள்ளுவது, ஆசிரியர்களை கத்தியை காட்டி மிரட்டுவது, பேருந்து மற்றும் ரயில் படிக்கட்டுகளில் புட்போர்டு செய்வது என அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ளபொன்விளைந்த களத்தூர் கிராமத்திலுள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் அரசு பேருந்தில் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவிகள் மாறி மாறி மது குடித்த படி கூச்சலிடுவது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. 

வைரலாகும் வீடியோ

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சமூகத்தில் உள்ள இளைய தலைமுறை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதுபோல் உள்ளதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணையும் நடந்து வருகிறது.