ஓடும் பஸ்சில் ஸ்கூல் யூனிபார்மில் பீர் குடித்து கும்மாளம் போட்ட மாணவிகள்.. கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு.!
பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகள் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது ‘பீர்’ குடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பேருந்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் பீர் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கல்வித்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீர் குடிக்கும் மாணவிகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகள் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது ‘பீர்’ குடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரல்
அந்த வீடியோவில் காட்சி 33 வினாடிகள் ஓடுகிறது. அதில், மாணவிகளில் ஒருவர் பீர் பாட்டிலை அசால்டாக கையில் எடுத்து குடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்ற மாணவிகளும் எந்தவித தயக்கமும் இன்றி ஒருவர் பின் ஒருவர் பீர் பாட்டில் வாங்கி மாறி மாறி குடிக்கிறார்கள். பின்னர் போதையில் மாணவிகள் கூச்சலிட்டு பேருந்தில் ரகளையில் ஈடுபடுகின்றனர். அருகில் மாணவர்களும் நிற்கிறார்கள். மற்ற பயணிகள் அருகில் இருப்பதை பற்றி கவலைப்படாமல் ஓடும் பேருந்தில் மாணவிகள் பீர் குடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்வித்துறை விசாரணை
இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பீர் குடித்து பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட மாணவிகளை தனித்தனியாக அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. சம்பந்தப்பட்ட பள்ளியிலும் ஆசிரியர்கள் தனியாக விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.