சென்னையை அடுத்து செங்கல்பட்டிலும் செம காட்டு காட்டும் கொரோனா... ஒரே நாளில் 36 பேர் பாதிப்பு..!
செங்கல்பட்டில் இன்று ஒரேநாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் இன்று ஒரேநாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 4 நாட்களாக வேகம் எடுத்து வருகிறது. அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் அதன் தாக்கம் குறையாமல் சங்கிலி தொடர்போல பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் இதுவரை 3,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தொடங்கிய கொரோனா அருகே உள்ள மாவட்டங்களிலும் வேகம் எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டில் இன்று ஒரேநாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. இதில், நசரத்புரத்தில் 18 , மதுராந்தகத்தில் 5 , நந்திவரத்தில் 4, பம்மலில் 3, திருநீர்மலையில் 2 , கிழக்கு தாம்பரத்தில் 2 , ஜமீன் பல்லாவரம், ரங்கநாதபுரம் ஆகிய இடங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் சமூக பரவல் உருவான நிலையில் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டில் ஒரே நாளில் 36 பேர் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.