Asianet News TamilAsianet News Tamil

கொடூர முகத்தை காட்ட தொடங்கிய கொரோனா.. தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொற்றால் பாதிப்பு..!

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona for 40 private medical college students
Author
Kanchipuram, First Published Mar 24, 2021, 4:31 PM IST

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் திடீரென அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அண்மையில், கொரோனா 2ம் அலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல், கொரோனா தொற்றின் 2வது அலையை நோக்கி இந்தியா வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்திருந்தார். 

Corona for 40 private medical college students

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Corona for 40 private medical college students
 
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 40 பேரும் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி பயின்றுவந்த 40 மாணவர்களுக்கு தொற்று உறுதியானதால் கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios