காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  707-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று ருத்தரதாண்டவம் ஆடிவருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 30,444ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து 14வது நாளாக ஆயிரத்தை தாண்டி வருகிறது. 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 707-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உள்ளது.