அத்திவரதர் தரிசனத்தில் பரபரப்பு... போலீசார் - அர்ச்சகர்கள் இடையே மோதல்..!
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசனத்தின் போது விஐபி வரிசையில் வந்த அர்ச்சகர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசனத்தின் போது விஐபி வரிசையில் வந்த அர்ச்சகர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 17 ஆம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பூஜை புனஸ்காரம் செய்யும் அர்ச்சகர்கள், விஐபி தரிசன நுழைவு வாயில் வழியாக, செல்ல முயன்றபோது அங்கிருந்த போலீசார், அடிக்கடி வருவதாக கூறி, அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டு 10 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூஜைகளை நிறுத்திவிட்டு அங்கு வந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சாமி தரிசனம் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பக்தர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அதிகாரிகள் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில், போலி விஐபி தரிசன டிக்கெட்டுடன் நுழைய முயன்றதாக இதுவரை 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 19 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து உள்ளனர்.