மக்களே...! இந்த சுங்கச்சாவடிகளில் பணம் வாங்க மாட்டாங்க..! சும்மா சொய்ன்னு போலாம்..!
சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே-3 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வு அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து (இன்று) சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி மையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டண வசூல் தொடங்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதில், பல்வேறு சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மக்களின் கஷ்டங்களை அறிந்து மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.