செங்கல்பட்டில் செம காட்டு காட்டும் கொரோனா... கட்டுக்கடங்காமல் எகிறுவதால் பொதுமக்கள் பீதி..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 8,718ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில்தான் கொரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4732 லிருந்து 4882ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 391ஆக இருந்து வந்தது. இன்று ஒரே நாளில் புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, செங்கல்பட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் சென்னை முலிடத்திலும், திருவள்ளூரை 2வது இடத்திலும், 3வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை, செங்கல்பட்டில் 66 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.