செங்கல்பட்டில் செம காட்டு காட்டும் கொரோனா... இன்று ஒரே நாளில் புதிய உச்சம்.. 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,008-ஆக உயர்ந்துள்ளது. 

Chengalpattu Corona affect case reach 10 thousand

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,008-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,17,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்துகிறது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.

Chengalpattu Corona affect case reach 10 thousand

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 9,658 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,008ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெறுவோர் 2349ஆக உள்ளது. இதுவரை 194 பேர் உயிரிழந்துள்ளனர். 

Chengalpattu Corona affect case reach 10 thousand

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை போன்று வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9,579 ஆக அதிகரித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios