செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் செல்கிறது. மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில்தான் கொரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,330 லிருந்து 3,839 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவி வருகிறது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224ஆக இருந்து வந்தத. இன்று ஒரே நாளில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, செங்கல்பட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செங்கல்பட்டு 3வது இடத்தில் இருந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பரங்கிமலை 44 , கூடுவாஞ்சேரி 23, கேளம்பாக்கம்-6, அச்சிறுப்பாக்கம் -4, செங்கல்பட்டு -3 பேர் உட்பட 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.