செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொடூர கொரோனாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக பெரும் உச்சத்தை எட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எகிறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203-ஆக உயர்ந்துள்ளது. 


 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. 8,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஆக உள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,360 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 661 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்து பாதிப்பில் 2வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் இருந்து வருகிறது.