மதுராந்தகம் அருகே காரும்- லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி - இந்திராணி தம்பதியர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது,  அத்திமானம் என்ற இடத்தில் எதிர்பாராதமாக விதமாக முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுப்பிரமணி, அவரது மனைவி, மகள்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.