Asianet News TamilAsianet News Tamil

கேலிக் கூத்தாகும் அத்திவரதர் தரிசனம்...!! என்ன நடக்குது காஞ்சிபுரத்தில்?

மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Athivarathar Special pooja for kathivaradhar
Author
Kanchipuram, First Published Jul 16, 2019, 2:49 PM IST

மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்து ஒன்றை டன் தங்க நகைகளை அணிந்துகொண்டு நடமாடும் நகைக்கடைபோல மதுரை வாட்டரத்தில் வலம் வந்து கொண்டிருந்த வரிச்சியூர் செல்வம் இவர் பல்வேறு குற்றச்செயல்களில் பலமுறை  மாமியார்வீட்டுக்கு ஜாலியாக டூர் சென்று வந்தவர். மூன்று முறை என்கவுன்டரிலிருந்து க்ளைமேக்சில் எஸ்கேப் ஆனவர். இவர் தற்போது எந்த குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை திருந்தி வாழ்கிறேன்’ என்று யுத்தமாக காட்டிக்கொண்டாலும் இந்த முரண்பாட்டின் மொத்த உருவமான இவர், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறி வருகிறார்கள். அடுத்தவன் உழைப்பை சுரண்டி தின்னும், ஊரான் சொத்தை ஆட்டையைப் போடும் இந்த கட்டப் பஞ்சாயத்து பண்ணி மொத்தமாக சுருட்டுவது, என மதுரை மக்களின் உடமைகளை அபேஸ் பண்ணி வந்தார் இந்த ரௌடி. 

Athivarathar Special pooja for kathivaradhar

இதுல கொடுமை என்னன்னா? கேப்புல இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பில் நிர்வாகி வேற, திருடி, ஆட்டையைப் போட்டு, கட்டப்பஞ்சாயத்து பண்ணி சம்பாதித்த பணத்தை அப்படியே சினிமாவில் இன்வெஸ்ட் செய்தார் இந்த திருட்டு மாஃபியா மேகனட்.
 
சரி விஷயத்துக்கு வருவோம்...40 வருஷத்துக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், இந்தாண்டு வெளியே வந்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள், அத்திவரதரை தரிசிக்கும் பொருட்டு அத்திவரதர் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற அத்தி வரதரை தரிசிக்க 30 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால்,  1 லட்சத்திற்கும் மேல் மக்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து குவிவதால் மாவட்ட நிர்வாகம் திணறுகிறது. அத்தி வரதரைக் காண மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு வி.ஐ.பி.களும் வி.ஐ.பி.கள் வீட்டு அம்மணிகளும் விலக்கல்ல!!

 

அத்திவாரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  பிஜேபி தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட முக்கிய விவிஐபிகள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இப்படி முக்கிய விஐபிக்களுக்காக செய்யப்படும் சிறப்பு அர்ச்சனை மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக  அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்துள்ளார். அவருக்காக சிறப்பு தரிசனம் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Athivarathar Special pooja for kathivaradhar

லட்சக்கணக்கான  பக்தர்கள் அத்திவரதரை சாதாரணமாக தரிசிக்கும் நிலையில், பல்வேறு வழக்குகளில், திருட்டு, கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்கில் கைதான, என்கவுன்டரிலிருந்து எஸ்கேப் ஆன நம்பர் ஒன் அக்யூஸ்ட் வரிச்சூர் செல்வம் சிறப்பு சலுகையில் அத்திவாரதரை தரிசிக்க வந்துள்ளதும், அவருக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்படுவதையும் பார்க்கும் பொது ஜனங்கள், அத்தி வரதர் தரிசனம் என்ன கேலிக் கூத்தா போச்சா? என்ன நடக்கிறது காஞ்சியில் போன்ற பல்வேறு கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios