நின்ற கோலத்துக்கு மாறினார் அத்தி வரதர்... காஞ்சியில் பக்தர்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

அத்திவரதரைத் தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் படையெடுத்தனர். இதுவரை சுமார் 50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளார்கள். இதனால், கடந்த ஒரு மாதகாலமாக காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடிவருகிறது. 
 

Athi varadar in standing position

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் சயன கோலத்திலிருந்த அத்தி வரதர், இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறர்.Athi varadar in standing position
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் விழாவுக்கு பிறகு ஜூலை 1 முதல் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துவந்தார். அத்திவரதரைத் தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் படையெடுத்தனர். இதுவரை சுமார் 50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளார்கள். இதனால், கடந்த ஒரு மாதகாலமாக காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடிவருகிறது. Athi varadar in standing position
கடந்த ஒரு மாதமாக சயன நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்தி வரதர தரிசணம் நேற்று மாலையோடு நிறைவு பெற்றது. அத்தி வரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதற்காக நேற்று மாலை 5 மணியேடு அத்தி வரதர் தரிசனம் நிறுத்தப்பட்டது. நின்ற கோலத்துக்கு மாற்றப்பட்டுவிட்ட அத்தி வரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.Athi varadar in standing position
 நின்ற கோலத்தில் அத்தி வரதரை காண பக்தர்கள் காஞ்சிபுரத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு பணிகளும் ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 19 வரை அத்தி வரதர் காட்சி அளிப்பார் என வரதராஜ பெருமாள் ஆலய வட்டாரங்கள்  தெரிவித்தன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios