Asianet News TamilAsianet News Tamil

காஞ்சிபுரத்தில் போதையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி சைக்கிளில் சென்ற இளம் பெண் பலி

காஞ்சிபுரத்தில் சைக்கிளில் சென்ற இளம்பெண் மீது லாரி மோதியதில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

22 year old woman killed road accident at kanchipuram district drunken lorry driver arrested vel
Author
First Published Nov 1, 2023, 9:10 PM IST | Last Updated Nov 1, 2023, 9:10 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திராகாந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச் செல்வி (வயது 22). முதுகலை பட்டதாரியான இவர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் வெற்றிச் செல்வி அலுவலகத்திற்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று வெற்றிச் செல்வியின் மீது பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டால்; தமிழர்கள் தானே என மத்திய அரசு அலட்சியம் செய்கிறது - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததே விபத்து ஏற்படக் காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios