ஜாதியை சொல்லி திட்டிய ஆசிரியை... மணமுடைந்த மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சி!!

ஜாதியை சொல்லி ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

two girl students attempted suicide after their teachers insulted by their caste

ஜாதியை சொல்லி ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகே தொப்பம்பட்டியை சேர்ந்த மாணவியர் சின்னாளபட்டியில் இருக்கும் அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஜாதியை சொல்லி திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பள்ளி கழிப்பறை வளாகத்தில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதையும் படிங்க: மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த சோகம்

இதை அடுத்து இருவரையும் மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வாகனத்தை சிறைபிடித்ததோடு சின்னாளபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தற்கொலைக்கு மாணவிகளில் ஒரு மாணவியின் தாயார், காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ஆசிரியை பிரேமலதா உட்பட சில ஆசிரியைகள் ஜாதியை சொல்லி திட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பெண் கேட்கீப்பரை வன்கொடுமை செய்ய முயற்சி; மருத்துவமனையில் அனுமதி

சக மாணவியர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதால் என் மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சின்னாளபட்டி போலீசார், ஆசிரியர் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர் பெண் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios