தென்காசியில் பெண் கேட்கீப்பரை வன்கொடுமை செய்ய முயற்சி; மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில், கேட் கீப்பர் பணியில் இருந்த பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

women gatekeeper attempt to rape in tenkasi district

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட்கீப்பராக கேரளாவை சேர்ந்த வித்யா என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் கேட்கீப்பர் அரைக்குள் இரவு புகுந்த மர்ம நபர் பெண் ஊழியர் வித்யாவை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அறையில் இருந்த போன் ரிஷிவரால் வித்யாவின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பெண் ஊழியர் சத்தம் போட்டதைத் தொடர்ந்து மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ம நபரின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெண் ஊழியர் வித்யா பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே கேட் கீப்பரை வன்கொடுமை செய்ய முயன்றது தொடர்பாக  பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பாவூர்த்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“முந்திரி தோப்பில்” நகைக்காக நடு இரவில் நடந்த பகீர் கொலை.. அதிர வைக்கும் பின்னணி !!

தற்போது சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில இளைஞர்கள் பலர் ரயில்வே கேட் அருகே செட் அமைத்து தங்கியுள்ளனர். பெண் ஊழியரின் பணியை கண்காணித்து இவர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர் உயிரிழந்த விவகாரம்; தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios