மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு திரும்பிய தந்தைக்கு நேர்ந்த சோகம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த விளாங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லிப்ட் கேட்டு வந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (வயது 55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில் தனது வீட்டில் இருந்த மகளை மருமகன் வீட்டில் விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது விளாங்குடி பேருந்து நிறுத்தம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் இருந்து உடையவர் தீயனூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட கலையரசன் மனைவி தமிழரசி(19). இவர் ராஜா பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி வந்துள்ளார். இந்நிலையில் விளாங்குடி - சுத்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நரியங்குழி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த கனரக லாரி ராஜா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லிப்ட் கேட்டு வந்த தமிழரசி பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் மத பிரச்சினைக்கு வழி வகுக்கிறார் - பாஜக பகிரங்க குற்றச்சாட்டு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான காவல்துறையினர் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்கடுக்காக துப்பாக்கிகள், கொத்து கொத்தாக தோட்டாக்கள்; காவலர்களை மிரலவிட்ட மர்ம நபர்கள்