Asianet News TamilAsianet News Tamil

மலைபோல் குவிக்கப்பட்ட ஆட்டு கறி, சாதம்; திண்டுக்கல்லில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அவற்றை சமைத்து பிரசாதமாக வழங்கினர்.

thousands of male devotees participate traditional temple festival at dindigul vel
Author
First Published Jun 5, 2024, 10:51 PM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே  கருத்தலக்கம்பட்டி புதூர் வடகாட்டான் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பெண்கள் வர கட்டுப்பாடு கடைப்பிடித்து வரப்படுகிறது. 

கோவில் திருவிழாவில் பச்சிளம் பெண் குழந்தை  முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இக்கோவிலில் இருந்து விபூதி முதல் பூஜை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த பொருளையும் கோவில் எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. 

தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, காய்கறி உள்ளிட்டவற்றை நேர்த்திக் கடனாக கோயிலுக்கு வழங்கினர். மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழா இவ்வாண்டு மே 28, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வடக்காட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றுது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 300 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது.

வெற்றி சான்றிதழை தொடாதே; தனித்தொகுதி எம்எல்ஏ.வின் கையை தட்டிவிட்ட மாவட்ட செயலாளர்

இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று நடந்த கறி விருந்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நத்தம், செந்துறை, சாணார்பட்டி, குட்டுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரம்  பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios