Ramanathapuram: வெற்றி சான்றிதழை தொடாதே; தனித்தொகுதி எம்எல்ஏ.வின் கையை தட்டிவிட்ட மாவட்ட செயலாளர்
நவாஸ் கனியின் வெற்றிச் சான்றிதழை தொட விடாமல் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் கையை மாவட்டச் செயலாளர் தட்டி விட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடே உற்று நோக்கிய ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியியில் நேற்று தேர்தல் முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ் கனி தன்னை எதிர்த்துப் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் சான்றிதழ் வாங்கும் பொழுது ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனின் கையை சான்றிதழ் மீது படவிடாமல் தட்டி விட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும், முகம் சுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவானது வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி பாஜக என்பதை வாக்கு வங்கி நிரூபித்துள்ளது - எல்.முருகன்
புதுவை உட்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ளார். இக்கூட்டத்தில் பிரதமர் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.