Asianet News TamilAsianet News Tamil

Theni Accident: தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் வாகனம் தேனி மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்.

1 person killed 5 persons highly injured while jeep accident at theni hills road vel
Author
First Published Jun 5, 2024, 6:59 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூருவை அடுத்த குல்பர்கா என்ற குல்பர்கி  பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி என்பவது தனது குடும்பத்தினர், உறவினர்கள் என எட்டு பேர் கொண்ட குழுவினர் கடந்த 30ம் தேதி வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். இந்நிலையில் இன்று சுற்றுலாவை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு புறப்பட்டு தமிழக, கேரளா எல்லையில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். 

Rajinikanth: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

அப்போது நான்காவது கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை திருப்பிய போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்த தடுப்புச் சுவரை உடைத்து தலைகீழாக கவிழ்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வைஷ்ணவி (வயது 12), கிருத்திகா (18), அம்பிகா (42), கரண் (11), விஜய் (31) ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சஞ்சீவி ரெட்டி (48) பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை  பலன் இன்றி உயிரிழந்தார்.

Savukku Shankar: சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு; நீதிபதி அதிரடி உத்தரவு

காயம் அடைந்தவர்களை போடி, குரங்கணி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios