நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து; வேண்டுமென்றே பெண்களை சாலையில் ஓடவிட்ட ஓட்டுநர்?

திண்டுக்கல் - ஆத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பேருந்தை  நிறுத்தாமல் பெண் பயணிகளை ஓடவிட்ட ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Request to take action against the government bus driver who did not stop at Dindigul vel

சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே இதனை நடைமுறையும் படுத்தியது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டி பல பகுதிகளில் அவர்களை அலட்சியமாக பார்க்கும் மனப்போக்கும் நடந்து வருகிறது. இருக்கைகளில் பெண்களுக்கு இடம் கொடுக்காமல் வருவது, சரியான நிறுத்தத்தில் அவர்களை இறக்கி விடாமல் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கின்றன. இது தொடர்பாக தமிழக அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது.

3 மாநில முதல்வர்கள் பங்கேற்கும் உலக முருக பக்தர்கள் மாநாடு; பழனியில் அமைச்சர் அதிரடி ஆய்வு

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் ஆத்தூர் வண்டி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் 9f  எனும் அரசு பேருந்து மதியம் 1.20 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை ஏற்றாமல், மேலும் பெண் பயணிகளை பேருந்துக்கு பின்னால் ஓடவிட்ட அவல நிலை நிகழ்ந்துள்ளது. திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மதியம் 1.20 மணிக்கு பேருந்து யாரையும் ஏற்றுவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

5 மாதங்களில் மட்டும் 28 தொழிலாளர்கள் பலி; பட்டாசு ஆலைகள் மீது கவனம் செலுத்துமா அரசு? உதயகுமார் கேள்வி

பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றாமல் பேருந்துக்குப்பின் ஓட விட்ட இந்த ஓட்டுனரின் இழிவான செயலை பலரும் கண்டிக்கின்றனர். மேலும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios