பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது கொடூர தாக்குதல்; நகை, பணம் கொள்ளை
பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை தாக்கி கட்டிப்போட்டு பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ள கும்பலை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மருத்துவர் உதயகுமார். மனைவி மற்றும் ஒரு மகளுடன் வசித்துவரும் உதயகுமாருக்கு, பழனி அண்ணாநகரில் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் உதயக்குமார் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது மகள் மருத்துவ மேல் படிப்பிற்காக சென்னையில் இருப்பதால், மகளை பார்க்க இவரது மனைவியும் சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த உதயகுமாரை முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் தட்டி எழுப்பியதை அடுத்து, மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்களைக் கண்டு கூச்சலிட முயன்ற மருத்துவர் உதயகுமாரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டனர். மேலும் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்றபிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்து, உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இளைஞரை அடித்து கொன்று மண்ணில் புதைத்த மர்ம நபர்கள்; காவல்துறை விசாரணை
அங்கு மருத்துவர் உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கை விரல் நரம்பு அறுக்கப்பட்டதால், மதுரை தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், டிஐஜி அபிநவ்குமார் ஆகியோர் குற்றம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
கணவனை இழந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு; காதலி வீட்டில் இளைஞன் தற்கொலை
காவல் துறையினரின் விசாரணையில் பழனி அண்ணாநகரில் வசித்து வரும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 100 சவரன் நகைகள் மற்றும் 20லட்சம் பணம் கொள்ளை அடிக்கபட்டது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.