Asianet News TamilAsianet News Tamil

எம்.பி.க்காக ரயில்வே கேட்டை மூட விடாமல் அடாவடி செய்த திமுகவினர் - நிலக்கோட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. வருவதால் ரயில்வே கேட்டை மூடவிடாமல் திமுகவினர் அடாவடி செய்த நிலையில், காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

DMK members obstructed the closing of the railway gate in Dindigul district
Author
First Published Jul 1, 2023, 5:02 PM IST | Last Updated Jul 1, 2023, 5:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 13வது வார்டு நாயக்கர் காலனியில் பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில் குமார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கொடைரோடு வந்தனர். 

திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களில் வரவேற்பு அளித்தனர். வரவேற்புக்கு பின்பு அரசு நிகழ்ச்சி நடக்கும் ஏத்து நாயக்கர் காலனிக்கு வாகனங்களில் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் உள்ளது. அப்போது மாலை மணி 6.20 நெல்லையில் இருந்து தாதர் மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் செல்வதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டு அலாரம் எச்சரிக்கை ஒலித்துக் கொண்டு இருந்தது. அப்பொழுது கேட் கீப்பர் ரயில்வே கேட்டை அடைத்துக் கொண்டிருந்தார். 

30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

அந்த நேரத்தில் கும்பலாக வந்த திமுகவினர், கேட்டை அடைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கேட்டை அடைத்துக் கொண்டிருந்த ரயில்வே கேட் கீப்பர் கேட்டை பாதி அளவில் நிறுத்தினார். அதன் வழியாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஊர்வலமாக 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர். அப்பொழுது ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

கடனை கட்டாததால் வீட்டு பொருட்களோடு சேர்த்து வீதியில் வீசப்பட்ட முதியவர்; பொதுமக்கள் அதிச்சி

ரயில் வரும் பாதையில் பள்ளியின் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் கேட் கீப்பர், அங்கிருந்த காவல் துறையினர் ஆகியோர் பதற்றம் அடைந்தனர். ரயில் வருவதற்கு சிறிது நிமிடமே இருந்த நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் வாகனங்களை வெளியே செல்லுமாறு கூறினார். வாகனங்கள் செல்ல முடியவில்லை. அம்மைநாயக்கனூர் எஸ்ஐ கருப்பையா துரிதமாக செயல்பட்டு அனைத்து வாகனங்களையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி கேட்டை மூட உதவி செய்தார். கேட் மூடிய ஒரு சில நிமிடத்தில் அதிவேகமாக வந்த ரயில் கேட்டை கடந்து சென்றது. ரயில் கடந்து சென்ற பின்பு அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர், கேட்கீப்பர் உள்ளிட்ட அனைவரும் பெருமூச்சு விட்டதோடு சம்பவத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ரயில்வே சிக்னல் கிடைக்கப்பெற்று அலாரம் ஒலி எழுப்பப்பட்ட பின்பு வலுக்கட்டாயமாக ரயில்வே கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்த திமுகவினரால் மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக காவல்துறை, பொதுமக்கள் முயற்சியால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios