தவறான திசையில் பைக் பயணம்; எமனாக வந்த பள்ளிப் பேருந்து - ஒரே நிமிடத்தில் காலியான மொத்த குடும்பம்
திண்டுக்கல் அருகே பள்ளிப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்ற பகுதியில் நத்தத்தில் இருந்து அழகர் கோவில் பகுதிக்கு தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முருகன் (வயது 40) என்பவர் அவரது மனைவி பஞ்சு (35), மகன் ஸ்ரீதர் (6) ஆகியோரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஆசம், விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்
சாலையை கடக்கும் முயற்சியில் முருகன் சாலையின் தவறான பாதையில் பயணித்துள்ளார். இதனால் அழகர்கோவில் நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்தும், முருகனின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.
த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!
இந்நிலையில் விபத்தில் சிக்கி மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த நத்தம் காவல் துறையினர் உடனடியாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக பள்ளிப் பேருந்து ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலையை கடக்க முயன்று தவறான திசையில் பயணித்தவர்கள் மீது பள்ளிப் பேருந்து மோதி மூவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.