கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உத்தராம்பாள். இவரது வீடு புதுவை மாநிலத்தில் இருக்கிறது. தினமும் தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டிச்சாவடிக்கு வந்து சென்றுளார்.  சம்பவத்தன்று  பணி முடித்துவிட்டு புதுவையில் இருக்கும் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில் உத்தராம்பாளுக்கு முன்பாக சென்றுள்ளார். உடனே அவரை இடைமறித்த உத்தராம்பாள் வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு செல்வது தவறு என்று கூறி அவரது செல்போனை பறித்துள்ளார். பின்னர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்திற்கு வந்து செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து உத்தராம்பாள் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த இளைஞர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார். ஆனால் அங்கு உதவி ஆய்வாளர் உத்தராம்பாள் பணியில் இல்லை. அது குறித்து காவல் நிலையத்தில் கேட்டபோது அவர் புதுவையில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருப்பதாக காவலர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மாலை மீண்டும் அந்த இளைஞர் காவல் நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு உத்தராம்பாள் பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் உதவி ஆய்வாளர் உத்தராம்பாளிடம் 'நான் செய்தது தவறுதான். அதற்காக ஏற்கனவே வருத்தம் தெரிவித்தேன். ஆனாலும் நீங்கள் செல்போனை பறித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வராமல் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள். நீங்க கூட தான் தலைக்கவசம் அணியவில்லை' என்று கேட்டுள்ளார்.

அவருடன் வந்த நண்பர்களும் 'செல்போன் பேசி வாகனம் ஒட்டியிருந்தால் அபராதம் தானே போட வேண்டும். நீங்க ஏன் செல்போனை பிடிங்கிச் சென்றீர்கள்?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதில் ஆத்திரமடைந்து உதவி ஆய்வாளர் உத்தராம்பாள்,' நீ யாரு? உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். இது என் காவல்நிலையம். வெளியே போ' என்று கத்தியுள்ளார். அதற்கு அவர்கள், 'இது மக்களுக்கான இடம் தானே' என்று கூறி இருக்கின்றனர். அதில் மேலும் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், 'நீ கலெக்டர்கிட்ட போய் சொல்லு. இல்ல வேற யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு. எனக்கு எந்த பயம் இல்லை என்று அதட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:  104 வயதில் மரணமடைந்த கணவர்..! துக்கம் தாளாமல் உயிர்விட்ட 100 வயது மனைவி..! சாவிலும் இணைபிரியாத தம்பதி..!

இவை அனைத்தையும் அந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் காணொளி எடுத்துள்ளனர். அதை சமூக ஊடகங்களில் பரவவிட அந்த காணொளி தற்போது வைரலாகி உள்ளது.காவல்நிலையத்தில் வைத்து இவ்வாறு பேசியிருக்கும் பெண் காவல் துறை அதிகாரியின் செயல்பாடு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க:  'பணியிட மாறுதலை ஏற்காதீங்க'..! காவல்துறை அதிகாரியைச் சுற்றிவளைத்து கதறி அழுத பெண்கள்..! பார்த்தவர்களை கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!