கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரகதவள்ளி. 38 வயதான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள், சக்தி, தேவா, சுகா ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தன்னை ஆபசாமாக பேசி மிரட்டல் விடுத்தாகவும், தன்னையும், தனது வீட்டையும் தாக்கியதாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனிச்சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை; இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

இந்த புகாரின் மீது இதுவரை வழக்கு செய்யப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த மரகதவள்ளி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்தார். இதனை பார்த்த அங்கிருந்த காவல் துறையினர் உடனடியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மரகதவள்ளி மிரட்டல் விடுத்தார். 

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி; எங்கள் பலத்தை தமிழகம் 25ம் தேதி பார்க்கும் - பாஜக

காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்து சமாதப்படுத்த முயன்ற நிலையிலும், அவர் சமாதானமாகவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த பெண் வைத்திருந்த கத்தியை பறித்துவிட்டு அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தி பட்டதில் காவலர் ஒருவர் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு மரகதவள்ளியை அழைத்துச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய பெண்ணால் பரபரப்பு நிலவியது.