சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த காரணத்திற்காக வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சூலூரில் ரங்கநாதபுரம் பிரிவு அருகே தனியார் மில் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிய வேன் ஒன்று திருச்சி சாலையில் காங்கேயம் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பணி முடிந்ததும் ஊழியர்களை குறித்த நேரத்தில் அவர்களது வீட்டில் இறக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டுநர் யுவராஜ் வேனை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது வேனுக்கு முன்பு சென்று கொண்டிருந்த காரை ஓவர் டேக் செய்வதற்காக தொடர்ந்து யுவராஜ் ஹாரன் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் வேனை வழிமறித்தார். காரில் இருந்து இறங்கி வேன் ஓட்டுநர் யுவராஜை தாக்கியுள்ளார். சற்றும் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் வேன் ஓட்டுநர் யுவராஜ் நிலைகுலைந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சரவணகுமாரை தடுத்து நிறுத்தினர்‌. 

செக்ஸ் வீடியோ.. 50 ஆண்கள்.. 35 லட்சம் பணம் பறித்த பெண்.. பாலியல் மோசடி கும்பல் எப்படி சிக்கியது?

இந்த சம்பவம் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் ஓட்டுநர் மற்றும் வேன் ஓட்டுநர் யுவராஜை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஹாரன் அடித்ததால் வேன் ஓட்டுனரை சக வாகன ஓட்டி ஒருவரே தாக்கிய வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லீவ் இன் உறவு.. படுக்கைக்கு வர மறுத்த பெண்.. ஸ்க்ரூடிரைவரால் தாக்கி கொல்ல முயன்ற நபர் - சிக்கியது எப்படி?