மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு கடைசியில் ரத்து.. அண்ணாமலை அப்செட்..!

பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, இன்றைய நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினர்.

The event of alternative parties joining BJP was finally cancelled, tn bjp president Annamalai upset-rag

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் (பிப்ரவரி 26) நடைபெற இருப்பதாக பாஜகவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த இடத்துக்கு இன்று மாலை செய்தியாளர்கள் சென்றிருந்தனர். மாலை 6.40 மணி வரை பாஜகவினர் யாரும் அங்கு வரவில்லை.

The event of alternative parties joining BJP was finally cancelled, tn bjp president Annamalai upset-rag

அதன் பின்னர் அங்கு கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், அங்கு கடைசி வரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவில்லை.

அப்போது பேசிய பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசும்போது, “கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அடுத்து பேசிய இணையமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்றுக் கட்சியினர் இணையும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவுக்கு வர தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios