பொள்ளாச்சியில் குடிப்பதற்கு மது கொடுக்க மறுத்த நண்பனை சக நண்பனே கட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதிச் சேர்ந்தவர் மணிகண்டன். அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது நண்பன் கணேசன். கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணேசன் மணிகண்டனிடம் மது கேட்டதாகக் கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் மணிகண்டனோ மது தர மறுத்துள்ளார். இதனால் கணேசன் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது, இதனை அடுத்து அப்பகுதில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மகாலிங்கபுரம் காவல் நிலைய காவல் துறையினர் நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு போலீசார் கோரிக்கை வைத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளும் மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தன் கடையை அகற்ற கணேசன் தான் காரணம் என மணிகண்டன் நேற்று மாலை வேலை முடித்து நடந்து சென்று கொண்டிருந்த கணேசனை அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து தாக்கியுள்ளார்.

சேலம் மாடர்ன் திரையரங்க இடத்தை அபகரித்து கருணாநிதிக்கு சிலை வைக்க முனையும் அரசு? நில உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

இதில் படுகாயம் அடைந்த கணேசன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மது தராததால் நண்பனை நண்பன் அடித்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.