கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்த ஓர் தம்பதி எங்களை கடத்தறாங்க  என்று கூச்சல்  போட்டபடி இறங்க  முயற்சி  செய்தனர். உடனே அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலரிடம் தகவல் சொல்லி காரில் இருந்த தம்பதியை மீட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை லட்சுமி மில் சிக்னலில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த காரில் இருந்து உதவி கேட்டு கதறல் சப்தம் கேட்டது. வாகனத்தில் இருந்து இறங்க முயன்ற இளைஞரை பிடித்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தனர். இதனையடுத்து அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் உடனடியாக அந்த காரினை மறித்து அதில் இருந்தவர்களை இறக்கினர். காரில் இருந்து இறங்கிய தம்பதி தங்களை காரில் கடத்துவதாகவும், காப்பாற்றும்படியும் கதறினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காரில் கத்தியை கழுத்தில் வைத்து தங்களை மிரட்டியதாகவும், தங்களை காப்பாற்றும் படி போக்குவரத்து போலீசாரின் காலில் விழுந்து கதறினர். இதனையடுத்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோரையும் அவர்கள் வந்த வாகனத்தையும் பந்தய சாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கடத்தி சென்று கொலை செய்து விடுவார்கள் என காதல் திருமணம் செய்த தம்பதி நடுரோட்டில் கதறியதால் பரபரப்பான சூழல் நிலவியது.