Asianet News TamilAsianet News Tamil

Watch : பொள்ளாச்சி யானை முகாமில், வன அதிகாரி பாடிய பாடலை மெய்மறந்து ரசித்த யானை!

பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறை அதிகாரி சோழமன்னன் என்பவர் யானையைப் பற்றி பாடிய பாடலுக்கு மெய்மறந்து நின்ற யானை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

In the Pollachi elephant camp, the elephant enjoyed the song sung by the forest official!
Author
First Published May 5, 2023, 11:14 AM IST

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகத்தில் கோழிகமுத்தி மற்றும் இங்வரகளியார் யானைகள் வளர்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோழிகமுத்தி முகாமில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் வனவர் சோழமன்னன், முகாமில் உள்ள அபிநயா என்ற வளர்ப்பு யானையை பாகன் குளிப்பாட்டி யானைக்கு உணவு அளிக்க அழைத்து வரும்போது, வனவர் சோழமன்னன் யானையை நிறுத்தி அதை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ் சினிமா பாடல் ஆன  "என்னவென்று சொல்வதம்ம யானை அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா அசைந்தாடும் பேரழகை நாங்கள் கும்பிடும் தெய்வமே" 

என்ற சினிமா பாடலின் மெட்டுகளோடு பாட துவங்கிய வனவரின் பாடலை கேட்ட அபிநயா என்கின்ற யானை மெய்மறந்து நின்று ரசித்தது.



இந்த பாடலை படிய வனவர் கூறுகையில், யானைகள் வெறும் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ் பணிகிறது. அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு. நம் வனத்தின் காவலனாக உள்ள யானைகளை வாழ்த்தி பாடும் போது யானைகள் மனம் மகிழ்ந்து உற்சாகம் அடைகிறது என்றார். அதேபோல என் பாடலை கேட்டு யானை அபிநயா உற்சாகமாக தலையாட்டி தும்பிக்கை அசைப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று வனவர் சோழமன்னன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios