Annamalai: "ஆட்டை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்" அண்ணாமலையின் கோரிக்கையை டிரெண்டாக்கும் திமுக.வினர்

கோவை தொகுதியில் பாஜக, திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவி உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோவை தற்போது திமுகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

DMK members are making the video of Annamalai's speech viral on the internet before the elections vel

கோவை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க என மும்முனை போட்டி இருந்து வந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அ.தி.மு.க வை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

வழக்கு பதிவுக்கு காரணமான செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் டிடிஎப் வாசன்

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பா.ஜ.க நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை பேசும் போது, ஆட்டுக் குட்டியை பிரியாணி சமைத்தாலும், எது சமைத்தாலும் அதனை கொடுமை படுத்தாமல் ஆடு வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் தி.மு.க வால் கோவையில் டெபாசிட் வாங்க முடியாது என கூறி இருந்தார். 

Kanimozhi: தூத்துக்குடியில் மீண்டும் திமுக; கனிமொழியை எதிர்த்த அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலி

இதனால் தி.மு.க தொண்டர்கள் தேர்தல் முடிந்த பின்பு ஆட்டை பிரியாணி போடுவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவு வந்து கொண்டு இருந்த போது கோவை கோட்டைமேடு பகுதியில் மட்டன் பிரியாணி சமைத்து  அருகில் ஆடுகளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்து தி.மு.க வென்று விட்டது, என்று அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதமாக ஏற்பாடு செய்து இருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறிய வீடியோ, மீம்ஸ்களை  தி.மு.க வினர் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வைரல் ஆகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios