கோவை சாமியார் வீட்டில் அதிரடி சோதனை.... ஐம்பொன் சிலை சிக்கியதால் பரபரப்பு!!

கோவையில் சாமியார் ஒருவரிடம் இருந்து ஐம்பொன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

aimpon idol seized from coimbatore preachers house

கோவையில் சாமியார் ஒருவரிடம் இருந்து ஐம்பொன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம் அடுத்த செல்வபுரம் புறவழிச் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்ற சாமியார் ஒருவர் வீடு அமைந்துள்ளது. இங்கு சிலைகள் வைத்திருப்பதாக சிலை தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசாரு அந்த சாமியாரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: வேலை முடித்து வருவோருக்கு அலர்ட் !! அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் கனமழை.

அப்போது 4 அடியில் ஐம்பொன் முருகர் சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சிலைக்கு உரிய ஆவணங்களும் எதும் அந்த சாமியாரிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதை அடுத்து சாமியாரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானே அந்த சிலையை தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையால் பதிவான உயிரிழப்புகள் எத்தனை? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!!

அதுமட்டுமின்றி அதற்கு சான்றாக சிலை தயாரிப்பது போன்ற வீடியோக்களையும் அதிகாரிகளிடம் அவர் காட்டியுள்ளார். இருப்பினும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மீட்கப்பட்ட அந்த சிலை சுமார் 200 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அதிஅர்டி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios