8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் நிலை குறித்து தாய் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.

8 Year Old Girl Paliyal Vankodumai in Tamil Nadu: அண்மை காலமாக இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. என்னதான் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் இத்தகையை குற்றங்களில் ஈடுபடும் கொடூர மனிதர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இதை பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்த செய்தி குறித்து விரிவாக பார்ப்போம்.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவன், சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றான்.

கொடூர வடமாநில இளைஞன்

அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் அழுது கொண்டே தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வடமாநில இளைஞன் ஒருவன் சிறுமியை தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது.

3 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் குற்றவாளி கைது செய்யப்படாதது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்னர். மேலும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரடியாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், தனது மகளுக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தது கல் நெஞ்சையும் உருக்குவதாக அமைந்துள்ளது.

தாய் கண்ணீர்மல்க பேட்டி

''எனது மகள் பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றபோது ஒருவன் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். எனது மகளை அடித்து துன்புறுத்திய அவன் வாய் எல்லாம் ரத்தம் வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 'அங்கிள் என்னை விட்டு விடுங்கள்' என எனது மகள் கெஞ்சியபோதும் அந்த கொடூரன் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளான். எனது மகளின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. ஒருவாரமாகியும் போலீஸ் குற்றவாளியை பிடிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளியை பிடித்து சுட்டுக் கொல்ல வேண்டும்'' என்று சிறுமியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சொல்வது என்ன?

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். சிறுமிக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும்'' என்றார்.