சென்னையில் விசாரணை கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; உறவினர்கள் குற்றச்சாட்டு
சென்னை வில்லிவாக்கம் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் துறையினர் நடத்திய தாக்குதலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரை தாக்கியதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நேற்று அதிகாலை வினோத்குமாரை வில்லிவாக்கம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வினோத்குமாரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் 24 மணி நேரம் முடிந்தும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் அவரின் தாயாரிடமும் முறையாக பதில் சொல்லாமல் அலைக்கழித்து உள்ளனர்.
சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பலி; தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையில் சோகம்
பின்பு வினோத்குமாருக்கு வயிறு வலி ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எந்த மருத்துவமனை என அவரது தாயார் கேட்டும் வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயர்களைக் கூறி அவரை அலைகழித்துள்ளனர். இறுதியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற அவரது தாயார் வினோத் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த பள்ளி மாணவி; 2 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது