சென்னையைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் மது விற்பனைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அதிக நேரம் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு நேரிடையாக செல்லும் கலைச்செல்வி, தனது முகநூல் பக்கத்தில் நேரலை செய்தவாறு கடை ஊழியர்களிடம் மூட சொல்லி வந்துள்ளார்.

அதன்படி அதிக நேரம் செயல்பட்டு வந்த 5 கடைகள் கலைச்செல்வியால் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் பட்டாபிராம் காவல்நிலையம் அருகே இருக்கும் ஒரு மதுபானக்கடை அதிக நேரம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் கோபமடைந்த கலைச்செல்வி துணிச்சலாக சென்று டாஸ்மாக் கடையின் வெளிப்பக்க கதவை இழுத்து மூடி பூட்டு போட்டார். பின் சாவியை அங்கிருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதிர்ச்சியடைந்த குடிமகன்களுக்கு கடை ஊழியர்களும் கடையின் பூட்டை உடைத்து வெளியே வந்துள்ளனர். கடைஊழியர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கலைச்செல்வி கூறும்போது, தமிழகத்தில் மதுபான கடைகளின் செயல்பாட்டு நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் சட்டத்திற்கு விரோதமாக காலை முதலே மது விற்பனை நடந்து வருகிறது. விடுமுறை தினங்களிலும் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகாக விற்கப்படும் மதுபான விலை இரண்டு மடங்கு அதிகமாக இருந்தாலும் குடிமகன்கள் தாராளமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் பலர் மதுவிற்கு அடிமையாகி குடும்பத்திலும் சமூகத்திலும் இடையேறு ஏற்படுத்தி வருகின்றனர். இவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கலைச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!