ஃபுல் மப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போதே துண்டித்த காதலி.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபரீத முடிவு.!
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் விஜய் கருப்பசாமி (27). லாரி ஓட்டுநர். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார். தாயுடன் சண்டை போட்டுக்கொண்டதால் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் தங்கி வந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென இணைப்பை துண்டிக்கப்பட்டதால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் விஜய் கருப்பசாமி (27). லாரி ஓட்டுநர். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார். தாயுடன் சண்டை போட்டுக்கொண்டதால் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் தங்கி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- கந்தசஷ்டி கவசம் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய இஸ்லாமிய மாணவி
இந்நிலையில், கருப்பசாமி அதே பகுதியை சேர்ந்தத பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை மதுபோதையில் இருந்த கருப்புசாமி தான் காதலித்து வந்த பள்ளி மாணவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் எப்போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்ட போது திடீரென மாணவியின் தாய் வந்ததால் இணைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர் அந்த மாணவி சிறிது நேரம் கழித்து கருப்பசாமியை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காதலி, இது குறித்து கருப்பசாமியின் தாய் மற்றும் அண்ணனிடமும் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கருப்பசாமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! டாஸ்மாக்கை மூடும் நேரத்தில் மாற்றமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!