சினிமாவை மிஞ்சிய விபத்து.. அந்தரத்தில் பறந்து தலைப்புற கவிழ்ந்த கார்.. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி.!
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்களான ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் சகோதரர்கள். தொழிலதிபர்களான இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் வேடந்தாங்கலில் இயங்கி வருகிறது.
சென்னையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்களான ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் சகோதரர்கள். தொழிலதிபர்களான இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் வேடந்தாங்கலில் இயங்கி வருகிறது. இந்த வாகனங்கள் பழுதடைந்ததால் சொந்த ஊரில் உள்ள மெக்கானிக்கை அழைத்து கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு 5 ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- Chennai Power Shutdown: சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் 5 மணி நேரம் மின்தடை..!
அப்போது, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மலையம்பாக்கம் அருகே அதிகவேகத்தில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் பறந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சுதாகர் என்பவரும் உயிரிழந்துவிட்டார். மற்ற இருவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகவேகத்தில் கார் வந்ததாகவும், ஓட்டுநரின் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்