Chennai Power Shutdown: சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் 5 மணி நேரம் மின்தடை..!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக ராயபுரம் பகுதிகளான எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்
ராயபுரம் பகுதி
எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆதம் தெரு, அத்தான் ரோடு, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிசாந்தி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மர்யதாஸ் தெரு மீனாட்சியம்மா பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!