சென்னையில் 93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி! தினமும் 910 தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்கள்!
சென்னையில் தினமும் 910 நாய்களுக்குத் தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தெருக்களில் உலவும் தெரு நாய்களால் வாகன விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் பலரும் நாய்க்கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் 93,000 தெரு நாய்களைப் பிடித்துத் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தினமும் 910 நாய்களுக்குத் தடுப்பூசி போட 7 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
7 மருத்துவக் குழுக்களும் தினமும் சுமார் 130 தெருநாய்கள் வீதம் மொத்தம் 910 தெரு நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்... மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
மாநகராட்சியின் இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுக்களில் ஒரு கால்நடை மருத்துவர், தெரு நாய்களை பிடிக்க தேவைப்படும் நான்கு நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இருவர், ஒரு வாடகை வாகன ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தெரு நாய்களை அவை சுற்றித் திரியும் தெருக்களுக்கே சென்று வலை வீசிப் பிடித்து, கால்நடை மருத்துவர் மூலம் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு, ஒட்டுண்ணி நீக்க மருந்தும் செலுத்தப்படும். ஊசிபோட்ட நாய்களுக்கு வண்ணச் சாயம் பூசி அடையாளமிடப்படும்.
2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கை 57,366 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 30% உயர்ந்திருக்கும் பட்சத்தில் தற்போதைய எண்ணிக்கை சுமார் 93 ஆயிரம் வரை இருக்கும். இந்தக் கணக்கீட்டின்படி இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகாரியை மிரட்டிய துரைமுருகனின் உதவியாளர்! மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை பரபரப்புத் தகவல்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D