சென்னையில் இன்று மதியம் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் IOB வங்கி பல ஸ்டால்களை அமைக்கின்றது.

பாஜகவின் இந்திய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்கபதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வருகிறார். கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியில் இன்று மதியம் நடைபெற உள்ள நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். மேலும் இன்று மதியம் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் IOB வங்கி பல ஸ்டால்களை அமைக்கின்றது.

Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, வெல்லத்திற்கு பதிலாக ரூ.500.. வங்கி கணக்கில் செலுத்த முடிவு

இதில் சாலையோர வியாபாரிகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், முத்ரா லோன் வேண்டுபவர்களுக்கும் பதிவு செய்யப்படுகிறது. எனவே கடன் தேவைப்படும் தகுதி உடையவர்கள் மதியம் 1 மணி முதல் வந்து பதிவு செய்து கொள்ளலாம் எனவே இந்த செய்தியை தாங்கள் பயன்படுத்தி கொள்வதோடு தகுதி உடைய தங்கள் நண்பர்களையும் அழைத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று பாஜக ஊடக பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக பாஜக மாநில ஊடக பிரிவு தலைவர் ரங்கநாயகலு இந்த தகவலை தெரிவித்துள்ளார். எனவே கடன் தேவைப்படுபவர்கள் இன்று மதியம் சென்னை கோடம்பாக்கம் சென்று இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பிரதமரை சந்தித்த போது கடிதம் கொடுத்தது உண்மைதான்! அதில் என்ன இருந்தது? ஓபிஎஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்.!