Asianet News TamilAsianet News Tamil

பிரதமரை சந்தித்த போது கடிதம் கொடுத்தது உண்மைதான்! அதில் என்ன இருந்தது? ஓபிஎஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்.!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு, கொலை சம்பவம் நடைபெற்றது. அப்போது தலைமை செயலகத்தில் அவருடைய அறைக்கு சென்று ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் என்று கூறினேன்.

It is true that he gave the letter when he met PM Modi.. OPS Shocking information tvk
Author
First Published Jan 4, 2024, 6:42 AM IST | Last Updated Jan 4, 2024, 6:47 AM IST

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை  தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திருச்சியில் பல்வேறு திட்டத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு கேட்டு இருந்தேன். அதன்படி வரவேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த முறை பிரதமரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை, பொதுவாகவே பிரதமரை சந்திக்கும் போது நலமுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்து கடிதம் தருவேன், அதன்படி திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்தித்த போதும் வாழ்த்து கடிதம் கொடுத்தேன். 

இதையும் படிங்க;- தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 நிறுத்துவது நியாயமா? ராமதாஸ்.!

It is true that he gave the letter when he met PM Modi.. OPS Shocking information tvk

இந்த நிமிடம் வரை  தேசிய பாஜக தலைமை எங்களிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில்  இருக்க கூடிய அதிமுக அலுவலகத்தை அமமுக கட்சியினர் கைப்பற்றி விட்டார்கள் என்று கூறுவது தவறான செய்தி. நாங்களும் அமமுகவும் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனுடன் இணைந்து பணியாற்றுவோம், கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றார். 

உச்சநீதிமன்ற ம் வழங்க இருக்கும் தீர்ப்பில் எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு, கொலை சம்பவம் நடைபெற்றது. அப்போது தலைமை செயலகத்தில் அவருடைய அறைக்கு சென்று ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் என்று கூறினேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியலும் நடவடிக்கை இல்லை. 

இதையும் படிங்க;- பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு வெளியிடாதது ஏன்.? அனைவருக்கும் 3 ஆயிரம் ரூபாயாக அறிவியுங்கள்- ஓபிஎஸ்

It is true that he gave the letter when he met PM Modi.. OPS Shocking information tvk

இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை  தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும். சசிகலா விரும்பினால் அவரை சந்திப்பேன். சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு தான் என்று இபிஎஸ் கூறுவது சுத்த பொய். கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு இருக்கிறது.  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியின் பொருளாளராக சீனிவாசன் பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை நாங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக கேட்கப்போகிறோம். அதற்கு அவர்கள் உரிய பதிலளிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios