மோசமான நிலைமை... விவரிக்க வார்த்தைகள் இல்லை! சென்னையில் அடுத்து நடக்கப்போவது என்ன? அதிர்ச்சி கொடுத்த வெதர்மேன்
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை வானிலை குறித்து ஷாக்கிங் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்து வருகிறது. இந்த புயலால் நேற்று இரவு முதல் சென்னையில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி இருக்கின்றன. இந்த மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் மற்றும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ரயில்நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அதுவரை மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையின் தற்போதைய நிலைமை குறித்தும் அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது குறித்தும் ஒரு ஷாக்கிங் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தகள் இல்லை. புயல் மேகங்களின் மெதுவான நகர்தலால் இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும்” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... கனமழையால் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; தத்தளிக்கும் நோயாளிகள்!!