சனாதன தர்மம் உருவாக தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு! அடுத்த 25 ஆண்டுகளில் இது நடக்கும்.. ஆளுநர் RN. ரவி.!
பாரத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது. இரண்டையும் ஒன்றாக தான் பாக்க முடியும். சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறுகிறது.
சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரா மடத்தில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி;- தமிழ்நாடு புனிதமான நிலம், பல ஆண்டுகளாக புனிதர்களும் மகான்களும் வாழ்ந்த நாடு. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்த நிலம் தமிழ்நாடு. சனாதன தர்மம் தொடங்க தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவுக்கு அறிமுகம் தேவைப்படுகிறது. பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளாக இது உள்ளது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜியின் நீக்கத்தை ஆளுநர் வாபஸ் பெறவில்லை - அண்ணாமலை விளக்கம்
பாரத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது. இரண்டையும் ஒன்றாக தான் பாக்க முடியும். சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறுகிறது. சனாதத்தில் பிரிவுகள் உள்ளது. வேறுபாடுகள் இல்லை. இரண்டிற்கு வித்யாசம் உள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும்.
இதையும் படிங்க;- தனக்கு இருக்கும் அதிகாரம் இதுதான்.. நாலரை மணி நேரத்தில் உணர்ந்த ஆளுநர்.. சபாநாயகர் அப்பாவு..!
சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை. சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாசாரம் உருவானது. மக்களின் துடிப்பையும் உணர்வையும் உணர்ந்தவர் பிரதமர் மோடி. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.