Asianet News TamilAsianet News Tamil

தனக்கு இருக்கும் அதிகாரம் இதுதான்.. நாலரை மணி நேரத்தில் உணர்ந்த ஆளுநர்.. சபாநாயகர் அப்பாவு..!

துணை பிரதமராக இருந்த அத்வானி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக  இருந்த முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பதவி விலகவில்லை. அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

This is the power that the Governor has.. RN Ravi realized.. speaker appavu
Author
First Published Jun 30, 2023, 12:54 PM IST

அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம், இல்லை என்பதை ஆளுநர் உணர்ந்து கொண்டுள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சபாநாயகர் அப்பாவு;- அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம், இல்லை என்பதை நான்கு மணிநேரத்தில் ஆளுநர் உணர்ந்து கொண்டுள்ளார். துணை பிரதமராக இருந்த அத்வானி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக  இருந்த முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பதவி விலகவில்லை. அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க;- ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ? அதேதான் இங்கேயும்! சு.வெங்கடேசன் விளாசல்.!

This is the power that the Governor has.. RN Ravi realized.. speaker appavu

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும் தான் ஆளுநருக்கு இருக்கும் ஒரே அதிகாரம். பதவியை விட்டு விலக முதல்வர் வலியுறுத்த வேண்டும் அல்லது அமைச்சர்கள் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். 

இதையும் படிங்க;- அமைச்சரவையை மாற்ற ஒப்புதல் அளிக்காத ஆளுநர் சென்னா ரெட்டி.! ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் தெரியுமா.?

This is the power that the Governor has.. RN Ravi realized.. speaker appavu

நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றாலோ அல்லது முதல்வர் அறிவுறுத்தினாலோ மட்டும் தான் பதவி விலக முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்த வகையில் பதவி விலகினார். அமைச்சர் நீக்கம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிக்க அவசியமில்லை. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  அறிவுரை வழங்கிய அமித்ஷா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியானது..!

Follow Us:
Download App:
  • android
  • ios