Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ? அதேதான் இங்கேயும்! சு.வெங்கடேசன் விளாசல்.!

ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே.

su venkatesan slams tamil nadu governor rn ravi
Author
First Published Jun 30, 2023, 12:05 PM IST

ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கூறியுள்ளார். 

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி கடந்த 14-ம் தேதியன்று  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க;- அறிவுரை வழங்கிய அமித்ஷா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியானது..!

su venkatesan slams tamil nadu governor rn ravi

இதனிடையே, செந்தில் பாலாஜியின் வகித்து வந்த இரண்டு துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி அரசாணை வெளியிட்டது.

su venkatesan slams tamil nadu governor rn ravi

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் 5 மணிநேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் முடிவில் இருந்து பின்வாங்கினார். இதுதொடர்பாக  முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு அறிவுறுத்தியதை அடுத்த தலைமை வழக்கறிஞரிடம் கருத்தையும் கேட்பது சரியானதாக இருக்கும் என்பதால் அவரை அணுகி கருத்து கேட்க உள்ளேன் என கூறியிருந்தார். இந்நிலையில், இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள் என எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  34 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு!பதவியில் இருந்து நீக்க கடிதம் எழுதுவீங்களா?ஆளுநரிடம் கேள்வி எழுப்பும் திமுக

su venkatesan slams tamil nadu governor rn ravi

இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்!  அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!

 

அதேபோல், மற்றொரு பதிவில்;- ஆளுநரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios