34 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு!பதவியில் இருந்து நீக்க கடிதம் எழுதுவீங்களா?ஆளுநரிடம் கேள்வி எழுப்பும் திமுக
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்ட ஆளுநர் ரவி, 34 மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி.?
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் நடைபெற்ற மோசடியில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ரவி முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார். ஆனால் முதலமைச்சர் தனக்குள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீட்டிக்க வைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த ஆளுநர் ரவி, மத்திய அரசின் சட்ட ஆலோசகர்களை சந்தித்து ஆலோசித்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார்.
34 மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கிண்டிக்கு ஒரு கேள்வி என்ற தலைப்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் மத்திய பாஜக அரசின் உள்ள 77 அமைச்சர்களில் 34 அமைச்சர்கள் மீது வழக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் மீது 7 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அமைச்சர் ஜான் பார்லா மீது 9 வழக்குகளும், உள்துறை இணை அமைச்சர் ஶ்ரீ நிசித் பிரமானிக் மீது 11 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய திமுக
இது போன்ற மத்திய அமைச்சர்களின் குற்ற வழக்கு பட்டியலை போஸ்டராக வெளியிட்டுள்ள திமுக, இவர்களைப் பதவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம்எழுதுவீங்காள என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் திமுக வழக்கறிஞர் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்